நிரம்பியது கபினி அணை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நிரம்பியது கபினி அணை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Suresh| Last Updated: வியாழன், 17 ஜூலை 2014 (18:51 IST)
கபினி அணை நிரம்பியதால், நீர் முழுவதுமாகத் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் மேட்டூருக்க்குத் தற்போது வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கபினி அணை முழுவதும் நிரம்பி விட்டதால், அதிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கும் என்றும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் 18 ஆயிரம் கன அடி நீரும் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கபினி அணை ஜூலை16 ஆம் தேதி திறக்கப்பட்டது. அதிலிருந்து வெளியேறிய நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை 17 ஆம் தேதி காலை வந்தடைந்தது.

மேட்டூர் அணை அணையில் 16.24 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. நீர்மட்டம் தற்போது 47.45 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,078 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் திறப்பு 800 கன அடியாகவும் உள்ளது.

கபினி அணை நிரம்பியதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அணை விரைவில் நிரம்பும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :