வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 27 மே 2016 (13:12 IST)

ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் கே.சி.வீரமணி!

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 134 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது. 32 அமைச்சர்களுடன் மீண்டும் ஆட்சியில் உள்ளார் ஜெயலலிதா. தமிழக அமைச்சரவையில் 24 அமைச்சர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.


 
 
இந்த கோடீஸ்வர அமைச்சர்கள் பட்டியலில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளார் வணிக வரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி. தேர்தல் பிரமாண பத்திரத்தில் அமைச்சர்கள் வெளியிட்டுள்ள சொத்து மதிப்பு அடிப்படையில் தான் அவர் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளார்.
 
கோடீஸ்வர தமிழக அமைச்சர்களில் முதல்வர் ஜெயலலிதா ரூ.113.73 கோடி சொத்துக்களுடன் முதலிடத்திலும், வணிக வரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ரூ.27.67 கோடி சொத்துக்களுடன் 2-வது இடத்திலும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் ரூ.23.02 கோடி சொத்துக்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
 
தற்போதைய அமைச்சர்களில் 17 பேர் பட்டதாரிகளாக உள்ளனர். 8 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.