திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 அக்டோபர் 2021 (11:42 IST)

தமிழ்நாடு நாள் ஜூலை 18 - ஸ்டாலின் அறிவிப்பு!!

தமிழ்நாடு நாள் ஜூலை 18 ஆம் தேதி கொண்டாடப்படும் இதற்கான விரைவில் அரசாணை வெளியாகும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு. 

 
தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. 
 
முன்னதாக தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் 'தமிழ்நாடு' என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. அதற்காக, சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.
 
தற்போது பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கையை கவனமாக பரிசீலித்து ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாள் என தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.