திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 ஜூன் 2021 (16:45 IST)

போலீசாருடன் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞருக்கு நீதிமன்றம் கண்டனம்!

சமீபத்தில் சென்னை சேத்துப்பட்டு தொகுதியில் போலீசாருடன் பெண் வழக்கறிஞர் தனுஜா என்பவர் ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். அவர் போலீசார்களை மரியாதை குறைவாக பேசியதும் மிரட்டியதுமான காட்சி கூடிய வீடியோக்கள் வைரலானது
 
இதனை அடுத்து பெண் வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் தனுஜா முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் வழக்கறிஞர்கள் தனுஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்
 
கொரோனா அதிகரித்து வரும் நிலையில் வழக்கறிஞருக்கு வெளியில் என்ன வேலை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் முன் ஜாமின் அளித்தால் அரசு மருத்துவமனைக்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரண நிதியாக தர தயாரா என்று கேள்வி எழுப்பினர் 
 
காவல்துறையினர் இந்த நேரத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணி செய்து வருகின்றார்கள் என்றும் அவர்களுடன் வாக்குவாதம் செய்வது தவறு என்றும் இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் பார் கவுன்சிலுக்கு நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது