வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2024 (11:52 IST)

பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சி.. அனாதையாக விடப்பட்ட அதிமுக..!

john pandian
ஒரு பக்கம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்று கூட கூட்டணியில் இருந்து வெளியேறாமல் கூட்டணியை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் ஒன்று கூட கூட்டணியில் மீண்டும் இணையாமல் இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக மற்றும் பாமக இரண்டு கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் பாஜக கூட்டணியில் ஏற்கனவே பாரிவேந்தர் கட்சி, ஏசி சண்முகம் கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை இணைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக பாஜக கூட்டணியில் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைய இருப்பதாகவும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது 
 
அநேகமாக இன்று அல்லது நாளை இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போகிற போக்கை பார்த்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் பாஜக கூட்டணியிடையே தான் கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran