புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 டிசம்பர் 2020 (17:24 IST)

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாதபோது அரசியலுக்கு வருவது அநாகரீகம்! ஜெயானந்த்

ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாதபோது அரசியலுக்கு வருவது அநாகரிகம் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெயானந்த்கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைந்த பின்னர் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக கூறி கமலஹாசன் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தற்போது அரசியலுக்கு வந்துள்ளனர். அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காகவே வந்திருப்பதாக கூறும் கமல் ரஜினி ஆகிய இருவருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் இருக்கும்போது ரஜினி கமல் ஆகிய இருவரும் அரசியலுக்கு வந்திருந்தால் அவர்கள் இருவரையும் பாராட்டி இருக்கலாம் என்றும் ஆனால் ஜெயலலிதா கருணாநிதி ஆகிய இருவரின் இறப்பிற்கு காத்திருந்து அரசியலுக்கு வருவது அநாகரிகம் என்றும் ஜெயானந்த் கூறியுள்ளார் 
 
இவருடைய தந்தையும் சசிகலாவின் சகோதரருமான திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தான் தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது