திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2016 (11:56 IST)

மருத்துவமனையில் டிவியை பார்த்த ஜெயலலிதா பதற்றம்?

மருத்துவமனையில் டிவியை பார்த்த ஜெயலலிதா பதற்றம்?

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சரியாகிவிட்டாலும், அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.


 
 
இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள ஜெயலலிதா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திகளை பார்த்து வருவதாக பிரபல தமிழ் வார இதழின் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.
 
அப்போது நாய் சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை பார்த்தபோது ஜெயலலிதா லேசாக பதற்றமடைந்ததாக கூறப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா அவரது வீட்டில் செல்ல நாய்களை வளர்ப்பது வழக்கம்.
 
கடந்த ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போது அவரை பார்க்க முடியாத சோகத்தில் அவர் வளர்த்த நாய்கள் இறந்துவிட்டனவாம். இது தான் ஜெயலலிதாவின் அந்த பதற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.