1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 22 மே 2016 (13:12 IST)

சொன்னா... நம்புங்க பாஸ்....ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின்

சொன்னா... நம்புங்க பாஸ்....ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
தமிழகத்தில், நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 134 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கிறது. இதனையடுத்து, மே 23 ஆம் தேதி தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க உள்ளார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இந்த விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
 
இந்த விழாவில் கலந்து கொள்ள, அதிமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
 
மேலும், தமிழகத்தில் மிகப் பெரிய எதிர்க்கட்சியான திமுகவுக்கு, அதன் தலைவர் கருணாநிதி அல்லது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக அரசு சார்பில் அழைப்பிதழ் அனுப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
 
இந்த நிலையில், புதிய அரசு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கும்பட்சத்தில், திமுக சார்பில் அதன் பொருளார் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சி கொடுக்க தயராகி வருகின்றாரம்.
 
மேலும், ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டால் தனக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும் என்றும், இனி வரும் காலத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட முடிவு செய்துவிட்டார்களாம்.