வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 22 மே 2016 (08:54 IST)

ஜெயலலிதா பதவியேற்பு விழா - அதிமுக எம்எல்ஏ-க்கள் கடும் அதிர்ச்சி

ஜெயலலிதா பதவியேற்பு விழா - அதிமுக எம்எல்ஏ-க்கள் கடும் அதிர்ச்சி

தமிழக முதல்வராக ஜெயலலிதா மே 23 ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏ-க்களின் உறவினர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

 
தமிழகத்தில், நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 134 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கிறது. இதனையடுத்து, மே 23 ஆம் தேதி தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க உள்ளார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இந்த விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
 
இந்த விழாவில், அதிமுக எம்எம்ஏ-க்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களது உறவினர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு எம்எம்ஏ-க்கு ஒரு பாஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாம்.
 
இதனால், அதிமுக எம்எல்ஏ-க்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சகிதம் வந்து சென்னையில் தங்கியுள்ளனர். மேலும், கட்சியினர், ஆதரவாளர்கள் அனைவரையும் அழைத்து வந்து லாட்ஜ்-களில் தங்கவைத்துள்ளனர். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடாது என்பதாலும், திடீர் விபத்தில் யாரும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதாலும் இந்த தடையாம்.