1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (09:15 IST)

ஜெயலலிதாவின் ஆவி சொன்னது சசிகலா சரியில்லை!

ஜெயலலிதாவின் ஆவி சொன்னது சசிகலா சரியில்லை!

தமிழகத்தின் அடுத்த முதல்வராக அன்புமணி ராமதாஸ் தான் வர வேண்டும் என ஜெயலலிதாவின் ஆன்மா விரும்புவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.


 
 
சுந்தந்திரப் போராட்ட வீரர் கவிச்சிங்கம் சேலம் அர்த்தநாரீச வர்மாவின் நூல் வெளியீட்டு விழா சேலத்தில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், அன்புமணி சொன்ன மாற்றம் முன்னேற்றம் தான் தமிழகத்தில் நடக்க போகிறது.
 
நான் ஊழல் செய்துவிட்டேன், எனது தோழியும் சரியில்லை. எனவே அன்புமணி தான் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வர வேண்டும் என ஜெயலலிதாவின் ஆவி சொல்கிறது. அன்புமணி முதல்வராவதை தான் ஜெயலலிதாவின் ஆன்மா விரும்புகிறது.
 
எனவே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வத்தின் ஆட்சியெல்லாம் முடிந்து போய் பாமக ஆட்சிதான் தமிழகத்தில் நடக்க உள்ளது என தெரிவித்தார்.