சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வைக்க ஜெயலலிதா கோரிக்கை


K.N.Vadivel| Last Updated: திங்கள், 14 டிசம்பர் 2015 (01:37 IST)
சிவில் சர்வீஸ் தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு   முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 
இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-
 
மத்திய அரசின், சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள், டிசம்பர் 18 ஆம் தேதி  முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்காக, தமிழகம் முழுக்க இருந்து  மாணவர்கள் பலர் சென்னை வந்து, தேர்வுக்காக விடுதிகளில் தங்கி படித்து வந்தனர்.
 
சென்னையில், வெள்ள பாதிப்புக்கள் காரணமாக, மாணவர்களுக்கு பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. மின் வினியோகமும் பாதிப்படைந்தது. வெள்ளத்தால் அவர்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில்,  தேர்வை நடைபெற்றால் அவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். எனவே, சிவில் சர்வீஸ் தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  


இதில் மேலும் படிக்கவும் :