செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 22 டிசம்பர் 2016 (16:21 IST)

அம்மா இல்லாத அம்மா வாட்டர்: மெல்ல மெல்ல மறையும் ஜெயலலிதா!

அம்மா இல்லாத அம்மா வாட்டர்: மெல்ல மெல்ல மறையும் ஜெயலலிதா!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கொண்டு வந்த திட்டமான 10 ரூபாய்க்கு 1 லிட்டர் அம்மா வாட்டர் பாட்டிலில் தற்போது ஜெயலலிதாவின் படம் இல்லாமல் விநியோகிக்கப்படுகிறது.


 
 
கடந்த 2011-ஆம் ஆண்டு ஆட்சிக்கு மீண்டும் வந்த ஜெயலலிதா கொண்டு வந்த வரவேற்கத்தக்க திட்டங்களில் அம்மா உணவகம் அம்மா வாட்டர் போன்ற திட்டங்கள் பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.
 
அம்மா உணவகம் உலக அளவில் பெயர் பெற்றது. பல நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் அம்மா உணவகத்தை வந்து பார்வையிட்டு பாராட்டி செல்கின்றனர்.
 
அதே போல அம்மா வாட்டர் திட்டமும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த அம்மா வாட்டர் பாட்டிலில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் படம் இருந்தது. இப்போது ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவரது படம் அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
 
செப்டம்பர் 22-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து அம்மா வாட்டர் பாட்டிலில் அம்மா என அழைக்கப்படும் ஜெயலலிதாவின் படம் மட்டும் நீக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.