செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 20 ஜூன் 2016 (11:57 IST)

காவலர் குடும்பத்திற்கு ஒரு கோடி வழங்கிய ஜெயலலிதா

காவலர் குடும்பத்திற்கு ஒரு கோடி வழங்கிய ஜெயலலிதா

ஓசூரில் படுகொலை செய்யப்பட்ட காவலர் குடும்பத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா ஒரு கோடி நிதி வழங்க உத்தரவிட்டார்.
 

 
ஓசூரில் கர்ப்பிணியாக இருந்த ஆசிரியையைத் தாக்கி அவரிடம் இருந்த நகைகளை பறித்துச் சென்ற குற்றவாளிகளை விரட்டிச் சென்று பிடிக்க முயன்ற காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று  போலீஸாரை கொள்ளையர்கள் சரமாரியாக கத்தியால் குத்தியதில், தலைமைக் காவலர் முனுசாமி பலியானார்.
 
இந்த நிலையில், தமிழக சட்டசபையில், காவலர் முனுசாமி மரணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்தார். மேலும், அவரது குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ ஒரு கோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு விதி 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும், காவலர் முனுசாமியின் மகள் படிப்புச் செலவையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்தார்.
 
ஏற்கனவே, முனுசாமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.