வெள்ளி, 7 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 28 ஏப்ரல் 2016 (21:25 IST)

ஜெயலலிதாவுக்கு மது ஆலை உள்ளது: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கருணாநிதி

ஜெயலலிதாவுக்கு மது ஆலை உள்ளது: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கருணாநிதி

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மதுபான ஆலை உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
 

 
தஞ்சாவூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசுகையில், திமுகவையும், எதிர்க் கட்சிகளையும் எப்படியும் அடக்கி ஒடுக்கி, தண்ணீரை போல் பணத்தை வாரி இறைத்து மீண்டும் ஆட்சியை பிடிக்க ஜெயலலிதா கனவு காண்கிறார். அவரது கனவு பலிக்காது. அது பகல் கனவு.
 
ஜெயலலிதா அம்மையார் படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்கிறார். அது, என்ன படிப்படியாக என்று தெரியவில்லை.
 
தமிழகத்தில் மதுக்கடைகளை மூடிய பெருமை எனக்கு மட்டுமே உண்டு. ஆனால், அப்படி மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறந்து, அரசாங்கமே மது வியாபாரம் செய்த பெருமை ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு.
 
ஆனால்,  ஜெயலலிதாவுக்கு சொந்தமான மதுஆலை உண்டு. அதில், விலை உயர்ந்த மதுபானங்கள் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், திமுகவினர் யாருக்கும் மது ஆலைகள் கிடையாது. மது வியாபாரம் செய்ததும் இல்லை என்றார்.