1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: வியாழன், 17 ஜூலை 2014 (11:52 IST)

8 மாவட்டங்களுக்குப் புதிய மாவட்டச் செயலாளர்கள்: ஜெயலலிதா உத்தரவு

அஇஅதிமுகவில் அமைப்பு ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ள 8 மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை முதலமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். 
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
 
காஞ்சீபுரம் மத்தி, திருவள்ளூர் வடக்கு, வேலூர் புறநகர் கிழக்கு, கிருஷ்ணகிரி, திருப்பூர் புறநகர், கோவை மாநகர், கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு ஆகிய மாவட்டங்களின், மாவட்ட கழகச் செயலாளர்களாகக் கீழ்க்கண்டோர் நியமிக்கப்படுகிறார்கள்.
 
காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளர் சி.வி.என்.குமாரசாமி (செங்கல்பட்டு நகரச் செயலாளர்), 
 
திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சிறுணியம் பி.பலராமன் (முன்னாள் எம்.எல்.ஏ.,), 
 
வேலூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் என்.ஜி.பார்த்திபன் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்) 
 
கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் வி.கோவிந்தராஜ் (மாவட்ட ஜெ பேரவைச் செயலாளர்), 
 
திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் (தேர்தல் பிரிவுச் செயலாளர், பேரவை துணைத் தலைவர்), 
 
கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் கணபதி ப.ராஜ்குமார் (வடக்கு மண்டலக் குழுத் தலைவர்), 
 
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் என்.தளவாய் சுந்தரம், 
 
கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர் டி.ஜெங்கின்ஸ் (மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர்).
 
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
 
இவ்வாறு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.