1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 9 மார்ச் 2016 (15:57 IST)

தேர்தலில் ஜெயலலிதாவே வெற்றி பெறுவார் : என் கணித ஜோதிடம் கணிப்பு

வருகிற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவே வெற்றி பெறுவார் என்று என் கணித ஜோதிட கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ள விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், யார் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்று பல்வேறு தனியார் தொலைக்காட்சி மற்றும் சில தனியார் நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அது ஒருபுறம் இருக்க, தேர்தல் முடிவுகளை கிரங்கள் மற்றும் எண் கணித ஜோதிட அடிப்படையில் ஜோதிடர்களும் கணித்து கூறுகிறார்கள்.
 
தேர்தல் கமிஷனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ஜோதிடம் தொடங்குகிறது. அந்த தேதியை கணக்கிட்டு ‘ இந்த கிரக நிலைக்கு அதிமுக வெற்றி பெறும்’ என்று சில ஜோதிடர்களும், மறுபுறம் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி இருந்தால், அக்கட்சி நிறைய இடங்களில் வெற்றி பெறும் என்று சிலரும் ஜோதிடம் கூறத் தொடங்கி விட்டனர். 
 
முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஜோதிடம், ஆன்மீகம், எண் கணிதம் ஆகியவற்றின் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு.  தன்னுடைய அரசியல் நடவடிக்கைகள் அனைத்தையும் ஜோதிடம் அடிப்படையில் அமைத்துக் கொள்வதுதான் அவரின் வழக்கம். அதிமுக போட்டியிடும் தொகுதிகள், பதவியேற்கும் தேதி,  பதவியேற்றதும் கையெழுத்திடும் கோப்புகளின் எண்ணிக்கை, தன்னுடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை,  தான் போகும் காரின் எண், என இப்படி எல்லாமே அவருக்கு ஜோதிடம்தான்.
 
தேர்தல் கமிஷன் மார்ச் 4ஆம் தேதி, தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தது. இதுவும் ஜெயலலிதாவிற்கு உகந்த ஏகாதசி திதியாகவே அமைந்துவிட்டது. 
 
என்கணித ஜோதிடப்படி இந்த முறையும் தமிழக முதல்வராக ஜெயலலிதாவே பதவியேற்பார் என்று ஜோதிடர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திமுகவிற்கு இரண்டாம் இடமும், பாஜகவிற்கு மூன்றாவது இடமும் கிடைக்கும் என கூறப்படுள்ளது. அதே சமயம் தேமுதிக அதிக இடங்களில் போட்டியிட்டாலும் அந்த கட்சி 30 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
மொத்தத்தில் இந்த தேர்தலில், தேமுதிக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிளுக்கு பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.