1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (10:49 IST)

ஜெ.வின் உயில் வெளியாகுதா?; போயஸ் கார்டன் தனக்கும் தீபாவுக்கும் தான் சொந்தம்: தீபக் அதிரடி!

அதிமுக பொதுச் செயலாளா் ஜெயலலிதாவிற்கு தன் உடன் இருக்கும் சசிகலா மற்றும் அவரது உறவினா்களை பற்றி நன்கு அறிந்து இருந்தார். அதனால்தான், ஜெயலலிதா உயிலை பத்திரிக்கையாளா் சோ.ராமசாமியிடம் இருந்தது. பிறகு உயில் ஆடிட்டா் குருமூர்த்தியிடம்  கொடுக்கப்பட்டது. அவரும் சசியின் கூட்டத்தின் ஆட்டத்திற்கு பயந்து பிரதமா் மோடியிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

 
ஜெயலலிதா பிறந்தநாளான இன்று அவை மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிலா் அந்த உயிலை பத்திரிக்கையாளா்கள்  முன்னிலையில் டெல்லியில் வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
 
குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தினகரனும், தீபக்கும் சசிகலாவை பெங்களூர் சிறையில் சந்திக்க சென்றபோது  இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு முற்றிவிட்டதாம். அதிமுக துணை பொதுச்செயலாளர் பதவியை தினகரனுக்கு கொடுத்ததும் தீபக்கை உறுத்தவே, உடனே ஊடகங்களில் தன்னுடைய மாறுதலான வெளிப்பாட்டை பேசத்தொடங்கிவிட்டார்.
 
இதன் அச்சாரமாக தீபக், ஒரு தனியார் தொலைகாட்சிக்கு தொலைபேசியின் வாயிலாக திடுக்கிடும் பேட்டி அளித்தார். அதில் பல  கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்து பேசிய தீபக், போயஸ் கார்டனை பற்றி தன் கருத்தை அதிரடியாக கூறினார். மேலும்  தீபக், டி.டி.வி.தினகரன் தலைமையை நாங்கள் ஏற்க மாட்டோம். அதிமுக தொண்டர்களும் இதை ஏற்க மாட்டார்கள் என்று கூறி  அனைவரையும் அதிர வைத்தார். மேலும் போயஸ் கார்டன் எனக்கும், தீபாவுக்கும் தான் சொந்தம் என, ஜெயலலிதாவின்  அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார்.
 
அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, 1௦௦ கோடி ரூபாய் அபராத தொகையை, தானே (தீபக்) தனி ஆளாக கட்ட  உள்ளதாகவும் அதன் பின், போயஸ் கார்டன் தனக்கும் தீபாவுக்கும் தான் சொந்தம் என குறிபிட்டுள்ளார்.