1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : திங்கள், 3 ஏப்ரல் 2017 (18:09 IST)

ஜெயலலிதா எனக்கு தாய் போன்றவர். 1 மணி நேர தியானத்திற்கு பின்னர் தீபா பேட்டி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று இரவு  சுமார் ஒரு மணி நேரம் தியானம் செய்த அவருடைய அண்ணன் மகள் தீபா,  தியானத்தை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், எனக்குமான உறவு தாய் - மகள் உறவு போன்றது என்று கூறிய தீபா, ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று அறிவித்ததில் இருந்தே, தனக்கு மறைமுகமாக தொல்லைகள் சிலர் கொடுத்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில் தீபாவின் தியானம் குறித்து சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டலான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இனிமேல் மீடியாக்களை எந்த அரசியல்வாதியும் கூப்பிட வேண்டியதில்லை. மெரீனாவில் போய் உட்கார்ந்து தியானம் செய்தால் அவர்களாகவே வந்துவிடுவார்கள் என்றும், தமிழக அரசியல் தியான அரசியலுக்கு மாறி வருவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.