திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2016 (12:27 IST)

பேசத் தொடங்கிய முதல்வர் : உற்சாகத்தில் மருத்துவர்கள்

பேசத் தொடங்கிய முதல்வர் : உற்சாகத்தில் மருத்துவர்கள்

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், தமிழக முதல்வர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
மூன்று வாரங்களுக்கும் மேல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் ஜெயலலிதா. அப்பல்லோ மருத்துவர்கள் தொடங்கி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் லண்டன் மருத்துர் ரிச்சர்ட் வரை அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 
தொடர்ந்து கொடுக்கப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்துகளால், நுரையீரல் தொற்று பெருமளவு குறைந்துவிட்டதாம்.  முதல்வரின் தொண்டையில் போடப்பட்டுள்ள துவாரம் மூலம் அவர் சுவாசித்து வருகிறார் என்றும், அவ்வப்போது சசிகலா மற்றும் மருத்துவர் சிவகுமார் ஆகியோரிடம் மெதுவாக சின்ன சின்ன வார்த்தைகள் பேசுவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
 
அதேபோல், அவருடைய கை மற்றும் கால்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சரி செய்ய தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் முதல்வர் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
 
முதல்வரின் வருகைக்காக காத்து கிடக்கிறது கார்டன்...