சிகிச்சைக்காக லண்டன் செல்ல ஜெயலலிதா விரும்பவில்லை - ரிச்சர்ட் பீலே
சிகிச்சைக்காக லண்டன் செல்ல தமிழக முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை என லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே கூறியுள்ளார்.
ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் செய்தியாளர்களை தற்போது சந்தித்து பேசினார்.அப்போது அவர் ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார். அவரோடு சேர்ந்து ஜெ.விற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் இதில் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
அப்போது, மேல் சிகிச்சைக்காக ஏன் ஜெயலலிதா லண்டனுக்கு கொண்டு செல்லப்படவில்லை என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ரிச்சர்ட் “வெளிநாட்டுக்கு கொண்டு செல்லும் அளவுக்கு ஜெ.வின் உடலில் சக்தி இல்லை. அவர் அப்போது மிகவும் பலவீனமாக இருந்தார். அடுத்து, அவருக்கு சுயநினைவு வந்தவுடன் இதுபற்றி அவரிடம் விவாதித்தோம். ஆனால், சிகிச்சைக்காக லண்டன் செல்வதில் தனக்கு விருப்பமில்லை என அவர் கூறிவிட்டார்” என ரிச்சர்ட் கூறினார்.