ஜெயா டிவி-யில் தற்போதைய செய்தி என்ன தெரியுமா?
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானதை அடுத்து தமிழக அரசியல் சூழ்நிலையில் பரபரப்பும் புது திருப்பங்களும் அறங்கேறி வருகிறது.
இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலைக்குள் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசியலில் அடுத்த முதல்வர் யார், சசிகலாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என அரசியல் வட்டாரங்கள் பரபரப்பில் உள்ளது.
இந்த நிகழ்வு குறித்து அனைத்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள் செய்திகளை தெரிவித்து வரும் நிலையில், அதிமுக கட்சியின் சேனலான ஜெயா டிவி இதை பற்றி சற்றும் கவலை படாமல், இந்த நிகழ்வு நடக்கவே இல்லை என்பது போல இது குறித்து எந்த ஒரு செய்தியையும் ஒளிப்பரப்பாமல் உள்ளது.