திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (16:49 IST)

ஜனவரி 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

holiday
கடலூர் மாவட்ட கலெக்டர் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் ஜனவரி 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என தெரிவித்துள்ளார். 
 
ஒரு சில மாவட்டங்களில் சில விசேஷமான பண்டிகைகள் விழாக்கள் நடக்கும் போது உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.
 
அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வரும் ஜனவரி 6ஆம் தேதி கொண்டாட இருக்கிறது. இதனை அடுத்து அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்
 
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 28ஆம் தேதி வேலை நாள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
ஜனவரி 6ஆம் தேதி சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற இருப்பதை அடுத்து அதிக பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran