’ஜல்லிக்கட்டு ஆபத்தான விளையாட்டு’ - சர்ச்சையை கிளப்பும் மேனகா காந்தி
ஜல்லிக்கட்டு போட்டி ஆபத்தான விளையாட்டு என மத்திய மந்திரி மேனகா காந்தி கூறியுள்ளார்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்தில் பேசிய மேனகா காந்தி, “ஜல்லிக்கட்டு நடத்த தடை அமலில் உள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரியமான, வரலாற்று சிறப்பு மிக்க விளையாட்டு தான். அதேநேரம் அபாயகரமான, ஆபத்தான ஒரு விளையாட்டு.
அரசியல் காரணங்களுக்காக ஜல்லிக்கட்டை வைத்து அரசியல் செய்வதை அவர்கள் கைவிட வேண்டும். தமிழக மக்கள் அறிவுபூர்வமானவர்கள். எனவே, ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்பதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்” என்றார்.