1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2017 (09:29 IST)

அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளையை அடக்க வீரர்கள் தீவிரம்!

அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளையை அடக்க வீரர்கள் தீவிரம்!

ஜல்லிக்கட்டு என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மதுரை அலங்காநல்லூர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற முடியாமல் இருந்த ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு தடையை மீறி நடத்தி வருகின்றனர்.


 
 
அலங்காநல்லூரில் இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என அறிவித்திருந்தார்கள். இதனால் அங்கு ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் செய்து வருவதாக கூறியிருந்தார்.
 
ஆனால், இன்று ஜல்லிக்கட்டு நடப்பதற்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் செய்தனர். இந்நிலையில் காலை முதலே அலங்காநல்லூரில் தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 
ஆர்ப்பாட்டத்தின் போது காளையுடன் வந்த ஒருவர் காளையை அவிழ்த்து விட அது கூட்டத்தினரிடையே சீறி பாய்ந்தது. இதனையடுத்து அதனை அடக்க இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள் முற்பட்டனர். ஒரு காளை பத்து நிமிடம் நின்று விளையாடியது. இதனையடுத்து அங்கு தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால போலீசாரால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை.