ஈஷா வளாகத்தை மருத்துவமனையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் – ஜக்கி வாசுதேவ் அறிவிப்பு !
தேவைப்பட்டால் தமிழக அரசு ஈஷா வளாகத்தை மருத்துவமனையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார் ஜக்கி வாசுதேவ்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களுக்கு மருத்துவமனைகளுக்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இன்னும் அதிகளவு தற்காலிக மருத்துவ மனைகளை நிர்மாணிக்கவும் அரசு முயற்சி செய்து வருகின்றது.
இதையடுத்து கோவையில் உள்ள ஈஷா வளாகத்தை தற்காலிக மருத்துவமனையாக உபயோகித்துக்கொள்ளலாம் என தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளார் ஜக்கி வாசுதேவ். மேலும் ஈஷா தன்னார்வலர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். ஈஷா தன்னார்வலர்கள் ஒவ்வொருவரும் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள இருவருக்காவது உணவளிக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.