எதைக் கொடுத்தேனும், இந்த அரசை வழி நடத்திக் கொண்டு இருக்கிறார் முதலமைச்சர். காலில் விழுந்தோர், காலில் விழுந்து கிடப்பவர்கள், விழுந்து எழவே முடியாதவர்கள், என பழனிச்சாமி அரசின் பரிதாபங்கள்!
எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற துணை முதலமைச்சரின் பரிதாபங்கள்!
தமிழக அரசியல் பரிணாமங்கள் மீண்டும் டார்வின் யுகத்திற்கே சென்று விட்ட, தமிழகத்தின் பரிதாபங்கள் !
TRB தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை ஊழல்கள் என தமிழகத்தின் பரிதாபங்கள் !
எந்த நேரமும் இந்த அரசு கவிழ்ந்து விடும் என்பதை அறிந்தும் வீர வசனங்கள் பேசும் தமிழக அமைச்சர்கள், தமிழகத்தின் பரிதாபங்கள்!
கட்சி அழிந்தேப் போனாலும் பரவாயில்லை. பதவியின் மோகத்தில் தமிழக அமைச்சர்கள், தமிழகத்தின் பரிதாபங்கள்!
அவ்வப்போது தெர்மோகோல், சோப்பு நுரை என மண்ணின் மைந்தன் வடிவேலுவை முந்தும் தமிழக அமைச்சர்கள், தமிழகத்தின் பரிதாபங்கள் !
வாழ்நாள் முழுவதும் அம்மா! அம்மா! என்ற ஒற்றைச்சொல்லை தவிர வேறு ஏதும் அறியாதவர்கள்! வேறு யார் யாருக்கோ வணக்கம் செய்யும் தமிழக அமைச்சர்கள், தமிழகத்தின் பரிதாபங்கள்!
நடப்பது வரை நடக்கட்டும்! அடுத்து நாம் வெற்றி பெற போவது இல்லை! அதுவரை மலை ஏறித்தேன் எடுப்பவன் முழங்கை நக்குவது போல, தமிழக அமைச்சர்கள், தமிழகத்தின் பரிதாபங்கள்!
அரசாங்கமே திவால் ஆனாலும் பரவாயில்லை! நமக்கு இலவசங்கள் வரணும்! என்ற மக்களின் ஸ்கூட்டி பரிதாபங்கள் !
அறிவு என்பது போடும் ஆடையிலும் இல்லை! பதவியிலும் இல்லை! அது செயலில் இருக்கிறது என்பதை சற்றும் அறியாத தமிழக அமைச்சர்கள், தமிழகத்தின் பரிதாபங்கள் !
நடப்பது நடக்கட்டும்.. கிழவியை தூக்கி நடுவீட்டில் வை என்பதைப்போல படத் திறப்பு விழா பரிதாபங்கள் !
ஒவ்வொரு பயணத்தின் போதும் சில பத்துகள் முதல் சில நூறுக்கள் வரை வரிய எளிய மக்களின் சட்டைப் பாக்கெட்டில் இருந்து திருடும் ஒரு அரசின் பரிதாபங்கள்!
ஆளே இல்லாத வீட்டில் யாருக்கோ டீ ஆற்றுவதுப்போல, இல்லாத எம்.ஜி.ஆருக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து விழா! உழைக்காத எம்.எல்.ஏக்களுக்கு லட்சக்கணக்கில் சம்பள உயர்வு ! என தமிழகத்தின் பரிதாபங்கள் !
ராஜ்ஜியமும், ராஜங்கமும் புனிதமானவை தான்; ஆனால் ஆள்பவர்கள் புனிதர்களாக இருக்கும் வரை!
sumai244@gmail.com