வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2024 (12:45 IST)

தமிழகத்துல இப்படி ஒரு இடமா? - வியக்க வைக்கும் கடற்பசு பாதுகாப்பு மையத்தின் மாதிரிப் படங்கள்!

International Dugong Conservation Centre

தஞ்சாவூர் மாவட்டத்தில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்க உள்ளதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான மாதிரி படங்கள் வெளியாகியுள்ளன.

 

 

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தது முதலாக மதுரையில் பிரம்மாண்ட கலைஞர் நூலகம், சென்னை செம்மொழி பூங்கா என பல பகுதிகளில் முக்கியமான செயல்பாடுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் வளைகுடா பகுதியில் காணப்படும் கடற்பசுக்களுக்கான பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

 

அதன்படி தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக்விரிகுடா பகுதியை கடற்பசு பாதுகாப்பகமாக (Dugong Conservation reserve) அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மனோரா கடற்கரை பகுதியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
 

 

கடற்பசு வடிவிலான காட்சி அரங்கம், அருங்காய்சியகம், 4டி திரை அரங்கம், பூங்கா, திறந்தவெளி அரங்கம், உணவகம், கழிவறைகள், வாகன நிறுத்தம், பிரம்மாண்டமான முகப்பு என 15 கோடி திட்ட மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கடற்பசு பாதுகாப்பு மையத்தின் மாதிரி படத்தை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

 

இந்த சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் தஞ்சை பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா பகுதியாகவும், இயற்கை, சூழலியல் தளமாகவும் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K