1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 19 செப்டம்பர் 2020 (13:18 IST)

நீட் தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் எங்கிருந்து கேட்கப்படுகின்றன… சில நியாயமான கேள்விகள்!

நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்குக் கேட்கப்படும் கேள்விகளில் 97 சதவீதம் தமிழ்நாடு ஆரசு பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறும் பெரும்பாலான குற்றச்சாட்டு சிபிஎஸ்சி சிலபஸ்ஸில் இருந்து நீட் தேர்வில் கேள்வி கேட்கப்படுகிறது என்றும், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்  ஆனால் உண்மையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து பிரபல ஊடகம் ஒன்று ஆய்வு செய்ததில் இந்த ஆய்வின் முடிவில் தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தான் 97 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்வில் எப்படி 97 சதவீதக் கேள்விகள் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து முகநூலில் செல்வக்குமார் பழனிச்சாமி என்பவர் எழுதியுள்ள பதிவு பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. அவரது பதிவு:-

நீட் கேள்விகளில் 180 ற்கு 177 கேள்விகள் தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டிருப்பதாக சிலர் அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு எண்ணை எழுதிவிட்டு நீட் ஒன்றும் சிரமமில்லை என்பதாகப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் பொய் என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.
இந்த மாபெரும் உருட்டினை முன் வைத்தும் சில கேள்விகளைக் கேட்போம்.
 
  1. இந்திய அளவில் நடத்தப்படும் ஒரு தேர்வில் 180 கேள்விகளில் 177 கேள்விகளை ஒரே மாநில பாடத்திட்டத்தில் இருந்து கேட்டால் மற்ற மாநிலப் பாடத்திட்டத்திலோ அல்லது மத்தியப் பாடத்திட்டத்திலோ படிக்கும் மாணவர்கள் நிலை குறித்து அரசுக்குக் கவலை இல்லையா?
 
  1. தமிழகப் பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே அனைத்துக் கேள்விகளையும் கேட்டால் அதை எதற்காக National Entrance and Eligibility Test என்று சொல்ல வேண்டும்?
 
 
  1. அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஒரு தேர்வில் தமிழகப் பாடத்திட்டத்தில் இருந்தே இத்தனை கேள்விகள் கேட்கப்படுகிறது என்னும் போது தமிழகப் பாடத்திட்டம் சரியில்லை என்று உளறிக் கொண்டிருந்தது பொய்யா?
 
  1.  நம் பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே மொத்தக் கேள்விகளையும் கேட்பத்தால் மற்ற மாநிலங்களில் இருந்து தேர்வு பெறும் மாணவர்கள் அனைவரும் மனப்பாடம் செய்தோ, தற்செயலாகவோ அல்லது ஊழல் செய்தோ தான் தேர்வாகிறார்கள் என்று புரிந்து கொள்ளலாமா? அப்படியானால் அது எந்த விதத்தில் தரத்தை நிர்ணயிக்கிறது என்பதற்கு ஏதேனும் விளக்கங்கள் உள்ளனவா?