வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (07:10 IST)

5 மாநிலங்களில் மட்டும் சுமார் 85% கொரோனா பாதிப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் 5 மாநிலங்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக 85 சதவீதம் அளவிற்கு பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த ஐந்து மாநிலங்களில் தமிழகம் இல்லை என்பது ஒரு ஆறுதலான செய்தியாகும் 
 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 46 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் இவற்றில் பஞ்சாப், கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள் மட்டுமே 84.4% பதிவாகி உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே 30 ஆயிரத்துக்கும் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐந்து மாநிலங்களில் மட்டும் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என்பதே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் எண்ணமாக உள்ளது