ஞாயிறு, 15 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (09:33 IST)

மாலத்தீவை டீலில் விட்ட இந்திய பயணிகள்! சீனாவை குறிவைக்கும் மாலத்தீவு!

Maldives

சமீபத்தில் மாலத்தீவுக்கும், இந்திய அரசுக்கும்  இடையே ஏற்பட்ட முரண் காரணமாக மாலத்தீவுக்கு செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

 

 

இந்தியா அருகே இந்திய பெருங்கடலில் உள்ள மாலத்தீவு தனி நாடாக செயல்பட்டு வருகிறது. தீவு நாடான மாலத்தீவிற்கு வருமானம் சுற்றுலாவை நம்பியே பெருமளவு உள்ள நிலையில், மாலத்தீவிற்கு ஏராளமான இந்திய சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் பயணித்து வந்தனர். 

 

ஆனால் சமீபத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் முகமது முய்சு சீனாவுடன் நட்பு பாராட்டுவதில் தீவிரம் காட்டி வருவதால் மாலத்தீவுக்கு செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

 

நடப்பு ஆண்டின் 2வது காலாண்டில் மாலத்தீவு சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 28,064 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 54 ஆயிரமாக இருந்தது. இந்திய பயணிகள் வருகை குறைந்ததால் மாலத்தீவு சீன பயணிகளை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது.

 

இதற்காக மாலத்தீவில் இருந்து சீனாவின் முக்கிய நகரங்களான பீஜிங், ஷாங்காய், செங்டு மற்றும் ஜியான் நகரங்களுக்கு விமான சேவைகளை மாலத்தீவு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

 

Edit by Prasanth.K