1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2022 (08:57 IST)

தமிழக மீனவரை சுட்ட இந்திய கடற்படை!? – வங்க கடலில் அதிர்ச்சி சம்பவம்!

fisherman
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மீனவரை இந்திய கடற்படை சுட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை, நாகப்பட்டிணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிப்பது வழக்கம். அவ்வாறு மயிலாடுதுறையை சேர்ந்த வீரவேல் என்ற மீனவர் விசைப்படகில் சென்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளார்.


அவரது படகை சந்தேகத்தின் பேரில் இந்திய கடற்படையின் ரோந்து கப்பல் பின் தொடர்ந்ததாகவும், ஆனால் அவர் படகை நிறுத்தாமல் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் வீரவேலின் காலில் குண்டு பாய்ந்துள்ளது.

படுகாயமடைந்த மீனவர் வீரவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K