1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2023 (19:29 IST)

ஆசியன் பாரா விளையாட்டில் 111 பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்கள்! - அமைச்சர் உதயநிதி பாராட்டு

asian para games
‘ஆசியன் பாரா விளையாட்டில்2022 போட்டிகளிலும் இந்திய வீரர்கள் 111 பதக்கங்களை பெற்று புதிய வரலாறு படைத்திருப்பது பாராட்டுக்குரியது ‘என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் சாதித்ததை போலவே, மாற்றுத்திறன் வீரர் - வீராங்கனையருக்கான ஆசியன் விளையாட்டு போட்டிகளிலும் இந்திய வீரர்கள் 111 பதக்கங்களை பெற்று புதிய வரலாறு படைத்திருப்பது பாராட்டுக்குரியது.

குறிப்பாக நம் தமிழ்நாட்டை சேர்ந்த மு.துளசிமதி, த.சோலைராஜ், மாரியப்பன் தங்கவேலு, எஸ்.நித்யஶ்ரீ, ரா.மனிஷா, முத்துராஜா, சோ.சிவராஜன் ஆகிய நம் வீரர் - வீராங்கனையர் வெவ்வேறு போட்டிகளில் 14 பதக்கங்களை குவித்துள்ளனர்.

பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி தம்பி - தங்கைகளுக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்தியா மற்றும் தமிழ்நாட்டுக்கு, நம் வீரர்கள் தொடர்ந்து பெருமை சேர்க்க என்றும் துணை நிற்போம் ‘’என்று தெரிவித்துள்ளார்.