வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2023 (10:22 IST)

தமிழகத்தில் 80 இடங்களில் வருமான வரித்துறை சோதனை.. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு..!

income tax raid
தமிழ்நாட்டில் அமைச்சர் ஏ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகம் உள்பட மொத்தம் 80 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் சோதனை செய்யும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் தி.நகர், கீழ்ப்பாக்கம்,வேப்பேரி உள்ளிட்ட அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
 
மேலும் திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்கள், கல்லூரி, வீடு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதல் சோதனை நடைபெறுகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
 
அதேபோல் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருவதாகவும், முன்னணி கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருறது.
 
தமிழகத்தில் மொத்தமாக இன்று ஒரே நாளில் 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran