1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (09:45 IST)

குடும்பத் தகராறில் மகன், மகளுடன் தற்கொலை செய்து கொண்ட தந்தை

குடும்ப தகராறின் காரணமாக மகன், மகளுடன் அணையில் குதித்து காய்கறி வியாபாரி தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் ஜீவா. காய்கறி வியாபாரியான ஜீவாவிற்கு ஹேமாவதி என்ற மனைவியும், கெஜலட்சுமி(12) என்ற மகளும், ராஜேஷ் (7) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஜீவாவுக்கும், அவரது மனைவி ஹேமாவதிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்துவந்தது. 
 
குடும்பத் தகராறின் காரணமாக, ஹேமாவதி ஆம்பூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில், மகனும், மகளும் தந்தையுடன் இருந்துவந்தனர். இதனால் விரக்தியடைந்த ஜீவா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, தனது மகன் மற்றும் மகளுடன் சென்று குடியாத்தம் மோர்தானா அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, தீயணைப்பு வீரர்கள் போராடி அணையில் இருந்து உடல்களை மீட்டனர். 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக ஜீவா மகன், மகளுடன் அணையில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.