திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 மே 2020 (13:18 IST)

கள்ளச்சாராயம் காய்ச்சி டிக்டாக் செய்த ஆசாமி! – அலேக்காக தூக்கிய போலீஸ்!

நாகப்பட்டிணம் அருகே எரிசாராயம் காய்ச்சி கொண்டே அதை டிக்டாக் செய்து வெளியிட்ட ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். மதுக்கடைகளும் மூடப்பட்டதால் சாராயம் காய்ச்சி விற்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கள்ளசாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்து வருகிறது.

இதனால் காவல் துறைக்கு தெரியாமல் பலர் கள்ள சாராயம் காய்ச்சி வரும் நிலையில், தான் சாராயம் காய்ச்சுவதை டிக்டாக்கில் போட்டு வலிய வந்து சிக்கிக் கொண்டுள்ளார் நாகப்பட்டிணம் ஆசாமி ஒருவர். நாகப்பட்டிணம் அருகே பொய்கை நல்லூர் பகுதியை சேர்ந்தவர் பூஞ்சோலை. இவர் தனது வீட்டின் கொல்லைப்புறத்திலேயே யாருக்கும் தெரியாமல் எரிசாராயம் காய்ச்சியுள்ளார். அதோடு இல்லாமல் தான் சாராயம் காய்ச்சுவதை வீடியோ எடுத்து டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் பூஞ்சோலையை கைது செய்துள்ளனர்.