1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2019 (14:13 IST)

நாட்டிற்கு எதிராக செயல்பட்டால்.... திமுக இப்படித்தான் ஆகும் - தமிழிசை குற்றச்சாட்டு

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்திற்காக திட்டத்தைப் பரிசீலிப்பதற்கு, தமிழக அரசின் ஒப்புதல் அவசியம் என்ற வாதத்தை சுற்றுச்சூழல் நிபுணர் குழுவினர் குழு கூறியுள்ளனர். 
கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி, மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சி செய்வது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடன் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ; கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டுவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளதன் மூலம், மத்திய பாஜக அரசு தமிழகத்தைக் கண்டுகொள்வதில்லை என்ற  எதிர்கட்சிகளின் பிரசாரம் தோல்வி அடைந்துள்ளது.
 
மேலும் நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக திமுக செயல்பட்டால், திமுக தனிமைப்படுத்தப்படும். அக்கட்சியை எதிர்க்கட்சிகள் கூட ஆதரிக்காமல் போய்விடும் என்று கூறினார். 
 
நாட்டின் ஒற்றுமைக்கு எதிராகச் செயல்பட்டால் திமுக தனிமைப்படுத்தப்படும் என்று கூறினார்.