செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (18:05 IST)

சித்தராமையாவை சந்திக்கின்றாரா சிம்பு?

சிம்பு கூறிய ஒரே வார்த்தையால் கர்நாடகத்திற்கு செல்லும் தமிழக பேருந்துகளை தேடிப்பிடித்து கன்னட மக்கள் தண்ணீர் கொடுத்ததை சிம்புவே எதிர்பார்த்திருக்க மாட்டார். இருமாநில அரசியல்வாதிகளே செய்ய முடியாததை சிம்பு தனியொருவராக சாதித்துவிட்டதாக சிம்பு ரசிகர்கள் பெருமைப்பட்டு கொண்டனர்.
 
இந்த நிலையில் காவிரி பிரச்சனை குறித்து பேச, சித்தராமையாவிடம் நேரம் கேட்டுள்ளாராம் சிம்பு. தமிழக முதல்வருக்கே நேரம் கொடுக்காத சித்தராமைய்யா, சிம்புவுக்கு கொடுப்பாரா? என்று பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால் சிம்புவுக்கு ஆதரவாக கன்னட மக்கள் பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருத்து வருவதால் இந்த நேரம் சிம்புவை சந்திப்பதால் அவர்களுடைய வாக்குகளை அப்படியே அறுவடை செய்யலாம் என சித்தராமையா நினைப்பதாகவும், இதனால் அவர் சிம்புவை சந்திக்க நேரம் தர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
காவிரி தண்ணீருக்காக சிம்பு ஏதாவது கடுகளவு செய்தால் கூட அது மிகப்பெரிய சாதனைதான் என்று கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்