அனைத்து காதலும் இது போன்று முடிந்தால் நல்லா இருக்குமே – ’காதலர்கள் ஆசை’

அனைத்து காதலும் இது போன்று முடிந்தால் நல்லா இருக்குமே – ’காதலர்கள் ஆசை’


Dinesh| Last Modified செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (09:38 IST)
நெல்லை மாவட்டம், தென்காசி அடுத்த கீழப்புலியூரை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவரின் மகன் தங்கத்துரை (27)  தென்காசியில் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

 


கீழப்பாவூரை சேர்ந்த பூலுடையார் மகள் முத்துமாரி (20) தென்காசியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் வேலை பார்க்கிறார்.தினமும் தங்கத்துரை வேலை செய்யும் பஸ்சில் சென்று வந்த போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் இது காதலாக மாறியது. இதனிடையே, இரவு காவலாளியான முத்துமாரியின் தந்தை, வீட்டில் இல்லாததை சாதகமாக பயன்படுத்தி, தங்கத்துரை, நள்ளிரவில் அடிக்கடி முத்துமாரி வீட்டுக்கு சென்று மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார்.இதையறிந்த ஊர்க்காரர்கள், முத்துமாரி தறிகெட்டு போய்விட கூடாது என்று எண்ணி, காதலர்கள் இருவரையும் கையும், களவுமாகப் பிடித்தனர்.

இதையடுத்து, இரு வீட்டாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் இருவரையும், ஊர்மக்கள், அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வந்தனர். பின்னர் இருவீட்டாரும் கலந்து பேசி முத்துமாரிக்கும், தங்கத்துரைக்கும் நள்ளிரவிலேயே திருமணத்தை நடத்தி வைத்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :