வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 மே 2019 (12:50 IST)

பத்தாம் வகுப்பு முடித்த 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு - ஸ்டாலின் உறுதி

கோயம்புத்தூர் மாவட்டம் முத்துக்கவுண்டன் புதூர் உள்ளிட்ட பகுதியில் சுலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக திமுக தலைவர் முக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
அப்போது ஸ்டாலின் கூறியதாவது :
 
நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக பாஜக ஆட்சியையும், இடைத்தேர்தல் மூலமாக அதிமுக அரசையும் மக்கள் வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டனர்.
 
10 ஆம் வகுப்பு படித்த 1 கோடி பேருக்கு சாலை பணியாளர் வேலை வழங்கப்பட்ம், கேஸ் சிலிண்டர் கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன்  5 சவரன் வரையிலான நகைக்கடன் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தேர்தலிலும் சரி , இடைத்தேர்தலிலும் சரி ஆளுங்கட்சியான அதிமுக, திமுகவுக்கு கடுமையான ட்ஃப் கொடுத்துள்ளது என்று தெரிகிறது.
 
 மேலும் தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலும் ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புடன் திமுக களமிறங்குகிறது.
 
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், வேலைவாய்பின்மை போன்றவற்றினை காலம் காலமாக மனதில் வைத்துள்ள மக்கள், தம் ஓட்டின் மூலம் இதற்கு நல்ல  தீப்பளித்தனரா என்பது, வரும் 23 ஆம் தேதி தெரிந்துவிடும்.