வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2016 (14:37 IST)

ஜெயலலிதா எப்போது வீடு திரும்புகிறார்? - அப்பல்லோ தலைமை மருத்துவர் தகவல்

மனவலிமை மிக்க முதல்வர் விரைவாக குணம் பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும். முதல்வர் விரும்பினால் எப்பொழுது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி தெரிவித்துள்ளார்.


 

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு மாத காலங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.

லண்டன், எயிம்ஸ், அப்பல்லோ மருத்துவர்களின் கூட்டு முயற்சியால் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த முதல்வர் ஜெயலலிதா தற்போது இயல்பான முறையிலேயே சுவாசித்து வருவதாகவும் வெறும் 15 நிமிடம் மட்டுமே செயற்கை சுவாசம் எடுத்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டதாகவும், அவர் விரும்பும் நேரத்தில் வீட்டுக்கு செல்லலாம் என அப்பல்லோ நிர்வாகம் கூறியது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து கடந்த 19ஆம் தேதி அன்று சிறப்பு பொதுப்பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், இன்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது கூறிய அவர், “முதலமைச்சர் ஜெயலலதா பிசியோ தெரபி சிகிச்சையால் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். மனவலிமை மிக்க முதல்வர் விரைவாக குணம் பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும். முதல்வர் விரும்பினால் எப்பொழுது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம்” என்றும் தெரிவித்துள்ளார்.