ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 8 மே 2016 (13:47 IST)

அதிமுக வெற்றி பெற்றால் சசிகலா தான் முதல்வர்: சுப்பிரமணியன் சுவாமி அதிரடி

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு எதிராக அதிரடி கருத்துக்களை கூறிவரும் பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தற்போது ஒரு அதிரடி கருத்தை கூறியுள்ளார்.


 
 
தமிழக சட்டசபை தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளார் மனோகரை ஆதரித்து பிரச்சாரம் செய்த சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதா முதல்வராக போவது இல்லை, சசிகலா தான் முதல்வராக போகிறார். எனவே அதிமுகவிற்கு வாக்களிப்பது வீண் என கூறினார்.
 
ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே நேற்று பிரச்சாரம் செய்த சுப்பிரமணியன்சுவாமி சொத்து குவிப்பு வழக்கில் ஜெயில் தண்டனை பெறப்போகும் ஜெயலலிதாவால் முதல்வராக முடியாது என கூறினார். ஜெயலலிதா அரசியலுக்கு வரும் போது ஒரு ரூபாய் கூட சொத்து இல்லை, ஆனால் தற்போது அவர் வேட்புமனு தாக்கல் செய்த போது தனக்கு 120 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெறப்போகிறார்.
 
மேலும் ஜெயலலிதா முதல்வராக போவது இல்லை, சசிகலா தான் முதல்வராக போகிறார். எனவே அதிமுகவிற்கு வாக்களிப்பது வீண் என்ற திரியை கொளுத்தி போட்டுள்ளார்.