செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2020 (13:28 IST)

தமிழகத்தில் 2 வகை வவ்வால்களுக்கு கொரோனா: பீதியில் மக்கள்!

தமிழகத்தில் உள்ள 2 வகை வவ்வால்களுக்கு கொரோனா இருப்பது ஐ.சி.எம்.ஆர். மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, இமாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 2 வகை வவ்வால்களில் பேட் கோவிட் வைரஸ் உள்ளது. அவற்றின் தொண்டை மற்றும் மலக்குடல் மாதிரிகளை எடுத்து ஆராயப்பட்டதில் இது தெரியவந்துள்ளது.
 
அதே நேரத்தில், கர்நாடகம், சண்டிகர், பஞ்சாப், தெலுங்கானா, குஜராத், ஒடிசா மாநிலங்களில் காணப்படுகிற வவ்வால்களில் பேட் கோவிட்  வைரஸ் இல்லை.
 
மனிதர்களுக்கு தற்போது பரவி வருகிற கொரோனா வைரசுக்கும் வவ்வால்களில் இருக்கும் பேட் கோசிட் வைரஸுக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.