1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 24 ஜூலை 2024 (18:26 IST)

ஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா உடல் குஜராத்தில் இருந்து,மதுரை விமான நிலையம் வந்தடைந்தது!

மதுரையில் மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் குஜராத் மாநிலத்தில் ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
 
சூர்யாவின் உடல் அவரது சொந்த ஊரான விளாத்திகுளம் கொண்டு செல்வதற்காக குஜராத்தில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.
 
பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் உடல் ஏற்றப்பட்டு ,சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றது.