1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2024 (13:12 IST)

''அதுமாதிரி சொல்கிறவனை செருப்பால் அடிப்பேன்'' செய்தியாளரின் கேள்விக்கு திருநாவுக்கரசர் எம்பி காட்டம்!

Thirunavukkarasar
விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள  நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி,  நாம் தமிழர், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநில கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
 
இந்த நிலையில், சமீபத்தில் ஜார்கண்ட்  மாநில எம்பி கீதா கோட் மற்றும் தமிழக எம்.எல்.ஏவாக இருந்த விஜயதாரணி உள்ளிட்டோர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தனர்.
 
அதேபோல் அதிமுகவில் இருந்து மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.
 
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கிண்டலாகப் பதிலளித்திருந்தார்.
 
இந்த நிலையில், இன்று திருச்சியில்   காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்  செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
 
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தக் கூட்டணி பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது: சிட்டிங் எம்பி என்ற முறையில் குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிட வேண்டும் என கேட்க எனக்கும் உரிமையிருக்கிறது. திமுக, முஸ்லிம் லீக் எதுவாக வேண்டுமானாலும் இருக்கும் அவர்களுக்கு இருக்கிற உரிமை ஏற்கனவே எம்பியாக உள்ள எனக்கு அதே தொகுதியில் போட்டியிடுவேன் என்று கூற எங்ககும்  உரிமையுள்ளது என்று கூறினார்.
 
நேற்றைய பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பேசியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர். ''வாக்குகளை கவர்ந்திழுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன்  அவர் பேசியுள்ளார் ''என்று கூறினார்.
 
மேலும்  காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக எழுந்த தகவல்  பற்றி செய்தியாளர்கள் திருநாவுக்கரசர் எம்பியிடம் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு அவர், ''அதுமாதிரி சொல்கிறவனை செருப்பால் அடிப்பேன். இனிமேல் சீமான் மாதிரி பேச நானும் முடிவு பண்ணிட்டேன் என்று காட்டமுடன் கூறினார்.