1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 14 மே 2016 (12:42 IST)

வருவேன் - ஆனால் வரமாட்டேன்: நடிகர் கமல்ஹாசன்

வருவேன் - ஆனால் வரமாட்டேன்: நடிகர் கமல்ஹாசன்

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள மே 16 ஆம் தேதி அன்று, வாக்குபதிவு செய்ய வந்தாலும் வருவேன் இல்லாட்டி வராமலும் போகலாம் என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
வாக்குப்பதிவு அன்று தமிழகத்தில் உள்ள அனைவரும் வாக்குபதிவு செய்ய வேண்டும் என்பற்காவும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை ஏற்று தனியார் நிறுவனங்களும், சினிமா நிறுவனங்களும் அன்றைய தினம் படபிடிப்புகளை ரத்து செய்துள்ளது.
 
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன்,  சபாஷ் நாயுடு என்ற புதிய படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். இதனால் அவர் வாக்குப்பதிவு செய்யமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
இது குறித்து, நடிகர் கமல்ஹான் கூறுகையில், வாக்குபதிவு செய்ய வந்தாலும் வருவேன் இல்லாட்டி வராமலும் போகலாம் என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
அதே போல, நடிகர் சூர்யாவும், அவரது மனைவி நடிகை ஜோதிகாவும் அமெரிக்காவில் உள்ளதால் அவர்கள் வாக்களிப்பார்களா என்ற தகவல் சினிமாத்துறையில் பரபரப்பு தகவல் பரவிவருகிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்