1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (20:51 IST)

என்னை பேருந்திலிருந்து இறக்கிவிட்டவர்களை மன்னித்துவிடுங்கள்: மீனவ மூதாட்டி வேண்டுகோள்

என்னை பேருந்திலிருந்து இறக்கிவிட்டவர்களை மன்னித்துவிடுங்கள்: மீனவ மூதாட்டி வேண்டுகோள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்து வந்த மூதாட்டி ஒருவரை பேருந்திலிருந்து இறக்கி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இது குறித்த வீடியோ நேற்று இணையதளங்களில் வைரலாக வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்த முக ஸ்டாலின் அவர்கள் மீனவ மூதாட்டியை பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட மூதாட்டி செல்வம் மேரியம்மாள் அவர்கள் பேட்டி அளித்தபோது என்னை பேருந்தில் இருந்து இறக்கி விட்டவர்களை தயவு செய்து மன்னித்து விடவேண்டும் என்றும் அவர்களுக்கு தண்டனை கொடுத்தால் அது அவர்களின் குழந்தைகளை பாதிக்கும் பாதிக்கும் என்றும் இனி அப்படி செய்ய கூடாது என்று அவர்களை எச்சரிக்கை மட்டும் எடுத்துவிட்டு மன்னித்து விடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கு தனது நன்றி என்றும் அவர் கூறி உள்ளார்