திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 அக்டோபர் 2024 (08:51 IST)

வாழா வெட்டியா வாழ விருப்பம் இல்ல! தற்கொலைக்கு முன் மணமகள் அனுப்பிய அதிர்ச்சி ஆடியோ!

Bride Suicide

கன்னியாக்குமரியில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலைக்கு முன் தாய்க்கு அனுப்பிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கன்னியாக்குமரி சுசீந்திரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும், கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சுருதி பாபு என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பின் சுசீந்திரத்தில் தனது கணவர் மற்றும் மாமியார், மாமனாருடன் வசித்து வந்த சுருதி பாபு நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இதுதொடர்பாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனது மாமியார் செண்பகவல்லி தன்னை கொடுமைப்படுத்துவதாக தற்கொலைக்கு முன் சுருதி பாபு தனது தாயாருக்கு அனுப்பிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
 

 

தனது கணவர் தன்னிடம் அன்பாக நடந்து கொண்டதாகவும், ஆனால் தனது மாமியார் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை பிறந்த வீட்டிற்கே திரும்ப வாழாவெட்டியாக அனுப்பி விடுவேன் என தனது மாமியார் கூறி வந்ததாகவும், தனக்கு வாழாவெட்டியாக செல்ல விருப்பமில்லாததால் இந்த முடிவு எடுத்ததாகவும் அதில் அவர் பேசியுள்ளார். இந்த ஆடியோ மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K