1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2023 (10:31 IST)

மோடி குற்றவாளி தான், சிறைக்கு செல்லவும் தயார்; ஆ ராசா

a raja
அதானி விவகாரத்தில் மோடி குற்றவாளி தான் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்வேன் என்றும் அதற்காக என்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும் சிறைக்குச் செல்ல தயார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா பேசியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 
 
அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி உதவி செய்து வருவதாக காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா தனது கருத்தை தெரிவித்துள்ளார். 
 
அதானி விவகாரத்தில் அதானி குற்றவாளி என்றால் மோடியும் குற்றவாளி தான் என்றும் இதை கூறியதற்காக என் மீது வழக்கு தொடர்ந்தது தண்டனை வாங்கி கொடுத்து என்னை சிறப்பி அனுப்பினாலும் நான் சிறை செல்ல தயாராக இருக்கிறேன் என்றும் என்னுடைய எம்.பி பதவியை பறித்தாலும் பரவாயில்லை என்று கூறியுள்ளார். அவருடைய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran