1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated: வியாழன், 25 மே 2023 (08:16 IST)

எடப்பாடியுடன் கைகோர்க்க தயார்.. திருமாவளவன் அதிரடி அறிவிப்பு..!

thirumavalavan
பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி அதிமுக போராட்டம் செய்யுமானால் எடப்பாடி பழனிச்சாமி உடன் கைகோர்த்து அந்த போராட்டத்தில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சியை தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் சமீபத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமூக நல ஆர்வலர்கள் தற்போது மதுவிலக்கு குறித்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் கள்ளச்சாராயத்தை எதிர்த்து மட்டுமே அதிமுக தற்போது போராடி வருகிறது என்றும் மது பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி போராட்டம் நடத்தினால் அதிமுகவுடன் இணைந்து கைகோர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் போராடும் என்றும் தெரிவித்தார். 
 
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை என்றும் விரைவில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மக்கள் இயக்கம் ஏற்படுத்தப்படும் என்றும் திருமாவளவன் கூறினார்.
 
Edited by Siva