புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 மே 2023 (10:30 IST)

தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு: ஹுண்டாய் நிறுவனம் அறிவிப்பு!

hyundai
தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
தென்கொரியா நாட்டின் கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஹூண்டாய் என்பதும் இந்த நிறுவனத்தின் கார்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அடுத்த 7 ஆண்டு காலத்திற்கு எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கவும் அதற்கான கட்டமைப்பை உருவாக்கவும் இந்த முதலீடு பயன்படுத்தப்படும் என ஹுண்டாய் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இந்த முதலீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுக்கும் ஹுண்டாய் நிறுவனத்திற்கும் இடையே நாளை கையெழுத்தாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த முதலீடு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran